×

தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை: தமிழ்நாட்டில் இதுவரை ரூ.296.40 கோடி பறிமுதல்

 

சென்னை: தேர்தல் பறக்கும் படையினரால் தமிழ்நாட்டில் ரூ.296.40 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலையொட்டி அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள், 24 நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி நேற்றைய நிலவரப்படி, இக்குழுக்களால் ரூ.61.98 கோடி ரொக்கம், ரூ.1.17 கோடி மதுபானம், ரூ.8.39 கோடி போதைப்பொருட்கள், ரூ.197.35 கோடி விலைமதிப்பற்ற உலோகங்கள் (தங்கம்/வெள்ளி), ரூ.27.51 கோடி இதர பொருட்கள் மற்றும் இலவசங்கள் என மொத்தம் ரூ.296.40 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags : Election Flying Squad ,Tamil Nadu ,Chennai ,Election Commission ,
× RELATED 234 தொகுதியிலும் வேட்புமனு தாக்கல்...