- எடப்பாடி
- வைகை
- விருதுநகர் மாவட்டம்
- முன்னாள் அமைச்சர்
- ராஜேந்திர பாலாஜி
- ராஜபாளையம் சட்டமன்றம்
- அஇஅதிமுக
- சிவகாசி சட்டமன்றம்
- பாஜக
- ராஜபாளையம்
- தமிழ்நாடு…
விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதிமுக சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, இந்தமுறை சிவகாசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். சாத்தூர் தொகுதி பாஜவிற்கும், ராஜபாளையம் தொகுதி தமிழக மக்கள் முன்னேற்றகழகத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை, திருச்சுழி, விருதுநகர், திருவில்லிபுத்தூர், ஆகிய தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சாத்தூர் தொகுதியை எதிர்பார்த்து காத்திருந்த முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் திருச்சுழி தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட ராமநாதபுரம் மாவட்டம், காவடிப்பட்டியை சேர்ந்த அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளரான யோகவாசுதேவன் வேட்பாளராக அறிவித்தால் தான் ஊருக்கு வருவேன் என சென்னையில் முகாமிட்டிருந்தார். ஆனால் அதே ராமநாதபுரம் மாவட்டம், ராமசாமிபட்டியை சேர்ந்த அருப்புக்கோட்டை அதிமுக நகர செயலாளரான சோலைசேதுபதி, அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதை விட மிகக்கொடுமை அதிமுகவின் முன்னாள் அமைச்சரான வைகைச்செல்வனுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர் கடந்த 2011ல் இத்தொகுதியில் போட்டியிட்டு அமைச்சர் ஆனார். பின்னர், 2016, 2021 தேர்தலில் நின்றார். 2 முறையும் திமுக வேட்பாளரான கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரனிடம் தோல்வியை தழுவினார். இந்த முறை சீட் கிடைக்குமென நம்பிக்கையுடன் காத்திருந்தார். ‘‘எடப்பாடிக்கு எல்லாம் நான் தான்… நான் எங்கு சீட் கேட்டாலும் கொடுப்பார்’’ என கூறிக் கொண்டிருந்த வைகைச்செல்வனுக்கு ‘நோ சீட்’ என கதவை அடைத்து விட்டார் எடப்பாடி. அவரை அருப்புக்கோட்டை தொகுதிக்கு அறிவிப்பார்கள் என காத்திருந்த அவரது ஆதரவாளர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 5 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. அருப்புக்கோட்டையில் சீட் கேட்டவர்கள் பலருக்கு சீட் கொடுக்காததால் பலரும் ஒதுங்கி விரக்தியில் உள்ளனர். திருச்சுழி தொகுதியிலும் இதேநிலைதான். விருதுநகர் தொகுதியை பாஜவினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பாஜ மாநில தலைவர் தனக்கு சாதகமாக சாத்தூர் தொகுதியை பிடித்து வைத்துள்ளார். சாத்தூர் தொகுதியை எதிர்பார்த்த அதிமுகவினருக்கு கல்தா கொடுத்து பாஜவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் விருதுநகர் மாவட்ட அதிமுக – பாஜவினரிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரான ரவிச்சந்திரன் கடும் அப்செட்டில் உள்ளாராம்.
பச்சை டோக்கனும் பல்பு வாங்கியதும்..
கடந்த 2011 தேர்தலில் வைகைச்செல்வன் போட்டியிட்டபோது, வாக்காளர்களுக்கு பச்சை டோக்கன் ஒன்றை வழங்கினார். தேர்தல் முடிந்ததும் அதற்கு ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள பொருள் வழங்கப்படுமென தெரிவித்திருந்தார். இவரது பேச்ைச நம்பி, பலரும் பச்சை டோக்கனை பத்திரப்படுத்தி வைத்திருந்தனர். தேர்தலில் வெற்றி பெற்றும் கொடுத்த ‘வாக்குறுதியை’ இவர் நிறைவேற்றவில்லை. இதனால் அடுத்தடுத்த 2 தேர்தல்களிலும் படுதோல்வியை தழுவினார். இன்று வரை விருதுநகர் மாவட்டத்தில் இவரை பச்சை டோக்கன் அடைமொழி தந்தே அழைக்கின்றனர். வாக்காளர்களுக்கு பல்பு தந்தவருக்கு, வாக்காளர்கள் மட்டுமின்றி, நம்பிய தலைமையும் பல்பு வழங்கி விட்டதே என ஆதரவாளர்கள் புலம்புகின்றனர்.
