- எடப்பாடி பழனிசாமி
- பா.ம.க.
- அஇஅதிமுக
- வெற்றிவேல்
- சங்ககிரி
- சேலம் மாவட்டம்
- தாரமங்கலம்
- வெங்கடேஷ் (அ) வெங்கடாச்சலம்
சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வெற்றிவேல் அறிமுக கூட்டம், நேற்று தாரமங்கலத்தில் நடந்தது. இதில் பங்கேற்க அதிமுக மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் (எ) வெங்கடாசலம் (எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர்) வந்தார். அப்போது, கூட்டணியை சேர்ந்த பாமகவினர் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பாமகவினரை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர்கள் முறையான தகவல் வரவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து அவர், சிறிது தொலைவில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்திற்கு சென்றார்.
அங்கு மாவட்ட செயலாளர், தலைவர், அமைப்பு செயலாளர் மற்றும் நகர செயலாளர், நகராட்சி கவுன்சிலர்கள் இருந்தனர். அவர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு, தகவல் தெரிவிக்காததற்கு மன்னித்து விடுங்கள் என கூறினார். அப்போது தேர்தலுக்கு உழைக்கும் பாமகவினரை வீட்டிற்கு வந்து பார்க்காமல், முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என அவர்கள் புகார் தெரிவித்தனர். பின்னர் அவர்களை சமாதானம் செய்த அவர், சால்வை அணிவித்து வரவேற்றார். அதன் பிறகு பாமகவினர் சென்டறு அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
