×

9 மணிக்கே வேட்புமனு செய்ய வந்த தேர்தல் மன்னனை திருப்பி அனுப்பிய போலீசார்

 

மேட்டூர்: தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு துவங்கியது. சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் மன்னன் என அழைக்கப்படும் பத்மராஜன் (56) காலை 9 மணிக்கே மேட்டூர் தொகுதிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்தார். வேட்பு மனு தாக்கல் செய்ய தனது நண்பருடன் புல்லட்டில் மேட்டூர் ஆர்டிஓ அலுவலகம் வந்தார். அங்கு நுழைவு வாயிலில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரியங்கா பர்கவ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்கள் தேர்தல் மன்னன் வந்த வாகனத்தை நிறுத்தி 11 மணிக்கு முன்பாக உள்ளே செல்ல முடியாது என்று கூறி அவரை திருப்பி அனுப்பினர். மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரை சேர்ந்த பத்மராஜன் இதற்கு முன் 252 முறை பல்வேறு தேர்தலில் போட்டியிட மனு தாக்கல்செய்துள்ளார். ஜனாதிபதி முதல் உள்ளாட்சி தேர்தல் வரை மனுதாக்கல் செய்திருக்கிறார். தேர்தல் மன்னன் என அழைக்கப்படும் பத்மராஜன் டெபாசிட் தொகையாக மட்டுமே ரூ.1கோடிக்கு மேல் பறிகொடுத்துள்ளார். இந்த முறை 253வது முறையாக தேர்தலில் களம் இறங்க உள்ளார்.

 

Tags : Mettur ,Tamil Nadu ,RTO ,Salem district ,
× RELATED த.வெ.க. தலைவர் விஜய்யிடம் ரூ.404.58 கோடிக்கு...