கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய அரசின் ஒத்துழைப்பால்தான் நிறைவேற்ற முடியும் என்ற சில வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவர் கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். மகளிர் உரிமைத் தொகை மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடையுமே தவிர, அது இலவசம் கிடையாது. திமுக ஆட்சியில் குற்றம் நடந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை முதல்வர் உறுதிசெய்கிறார். பெண்கள் பாதுகாப்புக்காக திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன என அவர் கூறினார்.
