×

திமுக vs அதிமுக vs நாதக ஆரணியில் முதன்முறையாக பெண் வேட்பாளர்கள் போட்டி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 6 தொகுதிகளில் சிட்டிங் எம்எல்ஏக்கள் மற்றும் ஆரணி தொகுதியில் பெண் வேட்பாளர் என்று 7 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. போளூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் தேமுதிக போட்டியிடுகிறது. ஆரணி சட்டமன்ற தொகுதியில் கடந்த 1951-2021 வரை நடந்த 16 சட்டமன்ற தேர்தல்களில் 8 முறை திமுக சார்பில் ஆண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டுள்ளனர்.

காங்கிரஸ் சார்பில் 4 முறையும், அதிமுக 7 முறையும் களம் கண்ட வேட்பாளர்களும் ஆண்களே. புதிய நீதி கட்சி, தேமுதிக போட்டியிட்டது. அதிலும் பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது, திமுக சார்பில் மகாலட்சுமி கோவர்தன், அதிமுக சார்பில் ஜெயசுதா, நாதக சார்பில் தவமணி என்று 3 பெண்கள் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் பெண்கள் போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும்.

ஆரணி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மகாலட்சுமி கோவர்தனன், தற்போது கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவராக உள்ளார். பிஇ பட்டதாரி. இத்தொகுதி திமுகவின் முதல் பெண் வேட்பாளர் என்ற பெருமை மகாலட்சுமிக்கு கிடைத்துள்ளது. பெண் வேட்பாளருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் திமுகவினர் மகிழ்ச்சியடைந்து தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதேபோல் அதிமுக, நாதகவினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 16 சட்டமன்ற தேர்தல்களுக்கு பிறகு முதன்முறையாக பெண் வேட்பாளர்கள் களம் காணும் ஆரணி தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

Tags : DMK ,AIADMK ,Nataka ,Arani ,Tiruvannamalai district ,DMDK ,Bolur ,
× RELATED தமிழக பாஜகவில் கோஷ்டி பூசல்...