×

புழல் சிறையில் கைதிகள் தகராறில் பிளேடால் முகம் கிழிப்பு

புழல்: சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் தண்டனை, விசாரணை மற்றும் மகளிர் என 3 பிரிவுகளிலும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். யில் தண்டனை, விசாரணை, மகளிர் என 3 பிரிவுகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த இம்மானுவேல் (33) என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த மாதம் 25ம் தேதி முதல் விசாரணை பிரிவில் அடைக்கப்பட்டு உள்ளார். இதே பிரிவில், ஆவடியை சேர்ந்த சந்துரு (22) என்பவரும் திருட்டு வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு விசாரணை பிரிவில் ஒரே அறைக்குள் அடைக்கப்பட்டு இருந்த இம்மானுவேல், சந்துரு என்ற 2 கைதிகளுக்கு இடையே வாய்த்தகராறு முற்றியதில் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமான சந்துரு, முகச்சவரம் செய்யும் பிளேடால் இம்மானுவேலின் முகத்தில் சரமாரி கிழித்துள்ளார். இதில் அவரது வலது பக்க கன்னத்தில் பலத்த வெட்டுகளுடன் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வலியால் அலறி துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் சிறைக் காவலர்கள் ஓடிவந்தனர். அங்கு முகத்தில் படுகாயம் அடைந்த கைதி இம்மானுவேலை மீட்டு, சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் புழல் சிறை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

Tags : Worm ,Bladal ,Maghal ,Chennai ,Bugal Central Prison Complex ,
× RELATED நாவலூரில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு