×

மனுதாக்கல் செய்ய வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி அனைத்து கட்சியினருக்கு அறிவுறுத்தல் வேலூர் சட்டமன்ற தொகுதியில்

வேலூர், மார்ச் 29: வேலூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்ய வரும்போது வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என வேலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டது. தமிழகத்தில் சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல் நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் வேலூர் சட்டப்பேரவை ெதாகுதியில் வேட்பு மனுதாக்கலின்போது, கடைபிடிக்க வேண்டியது குறித்து அனைத்து கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் வேலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு தேர்தல் அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

இதில், வேட்பு மனு தாக்கல் செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், விதிகள் குறித்து கட்சியினருக்கு விரிவாக விளக்கப்பட்டது. அதில், வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே வர வேண்டும். 100 மீட்டருக்குள் 3 கார்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். சுயேச்சை, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியினருக்கு 10 பேர் முன்மொழிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பின்னர், வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள், மனுவில் தங்களது விவரங்களை தவறின்றி பூர்த்தி செய்து வழங்க வேண்டும், புதிதாக வங்கி கணக்கு தொடங்கி, வங்கி புத்தக நகலை இணைக்க வேண்டும் ,ரூ.200 பத்திரத்தில் அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் உதவி ேதர்தல் அலுவலர் பழனி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags : Vellore ,Assembly ,Vellore Taluka Office ,Vellore Assembly ,Tamil Nadu… ,
× RELATED 13 தொகுதிகளில் திமுக, அதிமுக...