×

தெலங்கானாவில் பயங்கரம் காதலுக்கு தடையாக இருந்த தாய் கழுத்து நெரித்துக்கொலை

 

திருமலை: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை அவரது மகளே கொலை செய்து புதைத்துள்ளார். மகள், மற்றும் காதலனை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ஜவஹர் நகர் கவுகூர் பாரத் நகரை சேர்ந்தவர் அஞ்சு. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவரை பிரிந்த அஞ்சு, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து தனது மகள்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்தாண்டு மே மாதம் திடீரென அஞ்சு மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். எந்த தகவல் கிடைக்கவில்லை.

இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அஞ்சுவை தேடிவந்தனர். இதனிடையே அஞ்சுவின் மகள்களிடம் போலீசார் விசாரித்து வந்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அஞ்சுவின் 2வது மகளான இஷிகா, அதே பகுதியை சேர்ந்த மவுன்டியராஜ் என்பவரை காதலித்துள்ளார். இதனையறிந்த அஞ்சு, மகளை கண்டித்தார். அதனை பொருட்படுத்தாமல் தனது வீட்டுக்கும் மவுன்டியராஜை, இஷிகா அழைத்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் தனது தாயை தீர்த்து கட்டினால்தான் நாம் இருவரும் நிம்மதியாக வாழ முடியும் என இஷிகா, தனது காதலனிடம் கூறியுள்ளார். அதன்படி இருவரும் சேர்ந்து அஞ்சுவை கழுத்து நெரித்துக்கொலை செய்துள்ளனர். சடலத்தை வெளியே கொண்டு சென்றால் சிக்கல் என கருதி வீட்டின் படுக்கையறையில் கட்டிலுக்கு அடியில் பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர் என தெரியவந்தது.

இதையடுத்து தாசில்தார் முன்னிலையில் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த அஞ்சுவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இஷிகா மற்றும் மவுன்டியராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Telangana ,Anju ,Jawahar Nagar Kavakur Bharat, Telangana State Secunderabad ,
× RELATED குற்ற உணர்ச்சியால் தவிப்பு: மனசாட்சி...