- திமுக
- நயினார் நாகேந்திரன்
- நெல்லை எக்ஸ்பிரஸ்
- சென்னை
- பாஜக
- ஜனாதிபதி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பொதுச்செயலர்
- கேசவ விநாயகம்
- நெல்லை
- Express
- லோக்சபா தேர்தல்...
சென்னை: மக்களவை தேர்தலின் போது நெல்லை விரைவு ரயிலில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தமிழக பாஜ முன்னாள் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது நெல்லை விரைவு ரயிலில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. தாம்பரம் ரயில் நிலையத்தில் பணம் கைப்பற்றப்பட்ட நிலையில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், அவரது தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜவின் முன்னாள் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிடக்கோரி மாநிலங்களவை திமுக உறுப்பினர் ஆர்.கிரிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
மனுவில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பணம் கடத்தல் நடந்தது தொடர்பாக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இது தொடர்பாக மூல வழக்கு பதிவு செய்தும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை.
இந்த விவகாரத்தில் ஆரம்பகட்ட விசாரணை நடத்துவது முக்கியம் என்பதால் இருவர் மீதும் சட்ட விரோத பண பறிமாற்ற சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும். நயினார் நாகேந்திரனும், கேசவ விநாயகமும் பாஜவை சேர்ந்தவர்களாக இருப்பதால் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இருவர் மீதும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
