×

அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 14 திமுக அமைச்சர்களுடன் நேரடி போட்டி

சென்னை: திமுக அமைச்சர்கள் 14 பேரை எதிர்த்து நேருக்கு நேர் போட்டியிடாமல், அதிமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு அந்த தொகுதியை ஒதுக்கியுள்ளது. அதிகப்பட்சமாக பாஜ 6 தொகுதிகளில் திமுக அமைச்சர்களுக்கு எதிராக போட்டியிட எடப்பாடி மாட்டிவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:
* எ.வ.வேலு – திருவண்ணாமலை
* பெரியகருப்பன் – திருப்பத்தூர்
* அனிதா ராதாகிருஷ்ணன் – திருச்செந்தூர்
* மனோ தங்கராஜ் – பத்மநாபபுரம்
* எஸ்.எம்.நாசர் – ஆவடி
* மதிவேந்தன் – ராசிபுரம் (இந்த 6 தொகுதிகள் பாஜவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது)
* கே.என்.நேரு – திருச்சி மேற்கு
* டி.ஆர்.பி.ராஜா – மன்னார்குடி
* மா.சுப்பிரமணியன் – சைதாப்பேட்டை (இந்த 3 தொகுதிகள் அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது)
* சக்கரபாணி – ஒட்டன்சத்திரம்
* முத்துசாமி – ஈரோடு மேற்கு
* என்.ஆர்.காந்தி – ராணிப்பேட்டை (இந்த 3 தொகுதிகள் தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது)
* ராஜேந்திரன் – சேலம் வடக்கு தொகுதி பாமகவுக்கும், சிவசங்கர் – குன்னம் தொகுதி ஐஜேகேவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், வேட்பாளர்களும் புலம்ப தொடங்கி இருக்கின்றனர். அதேநேரம் அதிமுக முன்னணியினர் நிம்மதி அடைந்திருக்கின்றனர்.

Tags : AIADMK ,DMK ,Chennai ,BJP ,
× RELATED ஒரே கூட்டணியில் இருப்பதால் சமரசம்...