- மதிமுக
- சென்னை
- MDMK தொகுதி விநியோகக் குழு
- திமுக தொகுதி பங்கீட்டு குழு
- அண்ணா அரியலையா
- தணிக்கையாளர்
- அர்ஜுன்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன், மதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதிமுக போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது தொடர்பாக ஆலோசனை நடந்தது. தொடர்ந்து மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூன் ராஜ் அளித்த பேட்டி: நாங்கள் அளித்த விருப்ப பட்டியலில் இருந்து 4 தொகுதிகளை வழங்கி இருக்கிறார்கள். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
அதே சமயத்தில் மதிமுகவின் தகுதி, தரத்துக்கு ஏற்ப தொகுதிகள் எண்ணிக்கையை ஒதுக்கவில்லையே என்ற வருத்தமும் இருக்கிறது. சிலர் சிரிப்பார், சிலர் அழுவார். நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகிறோம். 4 தொகுதிகளிலும் எங்களுடைய சின்னத்தில் போட்டியிட முடியவில்லையே என்பதும் வருத்தம். இவ்வாறு அவர் கூறினார்.
