×

ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் எம்பிக்களின் தொகுதி வளர்ச்சி நிதி ரூ.20 கோடியாக உயர்த்த வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தில் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமோத் திவாரி, “தற்போது நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி திட்டத்தின்கீழ் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஆண்டுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது. இருப்பினும் கடந்த பல ஆண்டுகளாக தொகுதி வளர்ச்சி பணிகளின் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. தொகுதி வளர்ச்சி திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு பொதுவாக 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. எனவே, பணவீக்கம், விலைவாசி உயர்வு, அதிகரித்து வரும் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, எம்பிக்களின் தொகுதி வளர்ச்சி நிதியை ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.20 கோடியாக உயர்த்த வேண்டும். மேலும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

Tags : Congress ,New Delhi ,Rajya Sabha ,Zero Hour ,Pramod Tiwari ,
× RELATED மாநிலங்களவையில் தாக்கல் மத்திய...