- பாஜக
- மேற்கு வங்கம்
- சுவேந்து அதிகாரி
- கொல்கத்தா
- சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்
- முதல் அமைச்சர்
- மம்தா பானர்ஜி
- பவானிபூர்
- ஐயா
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தாவை எதிர்த்து பா.ஜ சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். அவர் கூறியதாவது: மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர் பணியில் சுமார் 79 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ 177 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நீடிப்பதற்காக எப்போதும் போலி வாக்காளர்களையே நம்பியிருந்தது. அத்தகைய போலிப் பதிவுகளை நீக்குவதற்காகவே தற்போதைய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடந்தது.
இது பாஜ தேர்தலில் வெற்றிபெற உதவும். காலை உணவின்போது 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன; மதிய உணவின்போது 7 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன; மாலை நேரத் தேநீர் வேளையில் மேலும் 14 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இரவு உணவு இன்னும் பரிமாறப்படவில்லை. அப்போது நீக்க எண்ணிக்கையை கூறுகிறேன். முதல் துணை வாக்காளர் பட்டியலில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட 32 லட்சம் வாக்காளர்களில், 14 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டது. இதுவரை, குறைபாடுகள் நிறைந்த வாக்காளர் பட்டியலிலிருந்து 79 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த போலி வாக்காளர்களில் 90 சதவீதம் பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவே வாக்களித்து வந்தனர். முஸ்லிம்கள் அதிகம் உள்ள வாக்குச்சாவடிகளில் அவர்களால் 100க்கு 99 வாக்குகளைப் பெற முடிகிறது என்றால், சனாதனிகள் அதிகம் உள்ள வாக்குச்சாவடிகளில் நம்மால் ஏன் 100-க்கு 100 வாக்குகளைப் பெற முடியாது?. இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
