×

மாநில அரசே சுங்கச்சாவடி கட்டணத்தை வசூலிக்க உத்தரவிட கோரி வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை மாநில அரசு வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் வெங்கட்ரமணா என்பவர் தாக்கல் செய்து இருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி வி நாகரத்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் எனது கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே உச்சநீதிமன்றம் தலையிட்டு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலை என்பது மத்திய அரசினுடைய கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. அந்த வகையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது என்பது மத்திய அரசின் கீழே உள்ளது உள்ளது. இந்த விவகாரத்தில் விசாரிப்பதற்கு எதுவும் இல்லை. என்பது மட்டுமில்லாமல், சுங்க சாவடி கட்டணத்தை மாநில அரசு வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்க முடியாது. என்று தெரிவித்த நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court ,New Delhi ,Venkatramana ,Justice P V Nagaratna.… ,
× RELATED மாநிலங்களவையில் தாக்கல் மத்திய...