×

க்யூஎஸ் பல்கலைக்கழக தரவரிசை: உலகின் முதல் 50 இடங்களில் சென்னை உட்பட 4 ஐஐடிக்கள்

புதுடெல்லி: லண்டனைச் சேர்ந்த க்யூஎஸ் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் நிறுவனம் பாடவாரியான க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசையின் 16வது ஆண்டு பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில், 100 நாடுகளில் 1900 பல்கலைக்கழகங்களில் 21,000 பாடப்பிரிவுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், சென்னை, டெல்லி, மும்பை, கராக்பூர் ஐஐடிக்களும், ஜேஎன்யு, பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவை பல்வேறு பாடப்பிரிவுகளில் முதல் 50 இடங்களை பிடித்துள்ளன. சென்னை ஐஐடி, பெட்ரோலியம் பொறியியல் பாடப்பிரிவில் 29வது இடத்தையும், சிவில் மற்றும் கட்டிடக்கலை பிரிவில் 46வது இடத்தையும், மெக்கானிக்கல் பிரிவில் 48வது இடத்தையும், கனிமங்கள் மற்றும் சுரங்கப் பிரிவில் 48வது இடத்தையும் பெற்றுள்ளது. டெல்லி ஐஐடி வேதியியல் பொறியியல் (48வது இடம்), மின் மற்றும் மின்னணு பொறியியல் (36), இயந்திரவியல், வானூர்தி மற்றும் உற்பத்திப் பொறியியல் (44), பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் (36), கணினி அறிவியல் (45) ஆகிய துறைகளில் டாப்-50க்குள் இடம் பெற்றுள்ளது.

Tags : QS ,Chennai ,New Delhi ,London ,QS Quacquerel Symonds ,Delhi ,Mumbai ,
× RELATED மாநிலங்களவையில் தாக்கல் மத்திய...