×

திண்டுக்கல்லில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கல்

திண்டுக்கல் : இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள் மூலமாகவும், ஆவின் பொருட்களின் மூலம், சினிமா தியேட்டர் டிக்கெட்டுகள், கேஸ் சிலிண்டர் ஸ்டிக்கர், ஏடிஎம் சென்டர், வங்கி ரசீது, பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்துகள்,

ஆம்னி வாகனங்களில் ஸ்டிக்கர், தூய்மை காவலர் வாகனங்களில் ஒலி பெருக்கி மூலம், டிஜிட்டல் சோசியல் மீடியா, ஜவுளிக்கடை பில்கள், மருந்தகங்கள் வாங்கும் பில்கள், மின்கட்டண ரசீதுகள், அரசு மருத்துவமனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரம் நடுதல், சுற்றுலா தளங்கள், கோயில்கள், மாரத்தான்,

இருசக்கர வாகன பேரணிகள், நெடுஞ்சாலை இயங்கும் சுங்கச்சாவடிகளில் பேனர்கள், ஸ்டிக்கர், தெரு நாடகம், கலை திருவிழாக்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திண்டுக்கல் சாலை ரோடு பாரத ஸ்டேட் வங்கி மற்றும் கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு கலெக்டர் சரவணன் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்ந்து, திண்டுக்கல் தேவி கேஸ் நிறுவனத்தில் எரிவாயு உருளையில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் பயிற்சி வினோதினி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் பிரபாகர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Dindigul ,Legislative Assembly General Elections ,Tamil Nadu ,Election Commission of India ,Aavin ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் அமலில் உள்ள...