×

நாகப்பட்டினம் அரசு கல்லூரியில் 100% வாக்களிக்க வலியுறுத்தி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகப்பட்டினம் : 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட சமூக நல அலுவலர் திவ்யபிரபா தலைமை வகித்தார். நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், மாணவ, மாணவியர் வோட் 100 சதம் என்பதை குறிக்கும் எழுத்துகள் மற்றும் எண்களின் வடிவில் அணிவகுத்து நின்றனர். மேலும் சட்டசபை தேர்தலில் நூறு சதம் வாக்குககள் பதிவாக உதவியாக இருப்பேன் என்று உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர்.

Tags : Nagapattinam Government College ,Nagapattinam ,Nagapattinam Government Arts and Science College ,Tamil Nadu Assembly ,
× RELATED சுற்றுலா பயணிகளுக்கு தேர்தல் ஆணையம்...