×

அரசு பேருந்து விபத்து ஓட்டுநர், நடத்துனருக்கு காயம்

திருவிடைமருதூர், மார்ச் 25: மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணத்திற்கு நேற்று காலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருவிடைமருதூர் அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அருகில் இருந்த 2 மின் கம்பங்களில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு காயம் ஏற்பட்டது. பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து திருவிடைமருதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : Thiruvidaimarudur ,Mayiladuthurai ,Kumbakonam ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...