×

வால்பாறை மலைப்பாதையில் பூத்துக்குலுங்கும் ஜகரண்டா மலர்கள்

*ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

வால்பாறை : வால்பாறை மலைப்பாதையில் உள்ள வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் ஜகரண்டா மலர்கள் செழித்து பூத்துக்குலுங்கி, இயற்கை அழகை மேலும் மெருகூட்டியுள்ளது.

நீலநிற தோற்றத்தில் கண்ணைக் கவரும் வகையில் மலர்ந்துள்ள ஜகரண்டா மரங்கள் சாலையோரம் வரிசையாக காட்சியளித்து, பயணிகளை கவர்ந்து வருகின்றன. குறிப்பாக மலைப்பாதையில் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி, இந்த அழகிய காட்சிகளை ரசித்து, புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர்.

சிலர் குடும்பத்துடன் நின்று செல்பி எடுத்துக் கொள்ள, இளம் தலைமுறையினர் சமூக வலைதளங்களில் பகிரும் வகையில் படங்களை பதிவு செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதி சிறிய சுற்றுலா மையமாக மாறியுள்ளது.

இயற்கையின் இந்த அழகிய தருணத்தை கண்டு மகிழும் பயணிகள், சாலையோரங்களில் கவனமாக வாகனங்களை நிறுத்தி பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : Valpara ,WALPARA MOUNTAIN PATH ,
× RELATED கடைசி நேரத்தில் ரத்து செய்தால்...