×

4 தொகுதிகளுக்கு கணினி மூலம் சுழற்சி முறையில் 6,692 பேருக்கு வாக்குப்பதிவு பணி ஒதுக்கீடு

*வரும் 28ம் தேதி முதற்கட்ட பயிற்சி வகுப்பு

*ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தகவல்

தேனி : தேனி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை-1 , நிலை-2, நிலை-3 அலுவலர்களுக்கு கணினி மூலம் சுழற்சி முறையில் பணிகள் ஒதுக்கீடு செய்வதற்கான முதற்கட்ட சீரற்றமயமாக்கல் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார்.

இந்த கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி மற்றும் கம்பம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

அதனடிப்படையில், ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் 344 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிவதற்காக 410 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களும், நிலை-1 வாக்குப்பதிவு அலுவலர்கள் நிலையில் 455 நபர்களும், நிலை-2 வாக்குப்பதிவு அலுவலர்கள் நிலையில் 387 நபர்களும், நிலை-3 வாக்குப்பதிவு அலுவலர்கள் நிலையில் 339 நபர்களும் என மொத்தம் 1591 நபர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் 359 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிவதற்காக 431 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களும், நிலை-1 வாக்குப்பதிவு அலுவலர்கள் நிலையில் 454 நபர்களும், நிலை-2 வாக்குப்பதிவு அலுவலர்கள் நிலையில் 483 நபர்களும், நிலை-3 வாக்குப்பதிவு அலுவலர்கள் நிலையில் 484 நபர்களும் என மொத்தம் 1852 நபர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போடி சட்டமன்றத் தொகுதியில் 346 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிவதற்காக 401 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களும், நிலை-1 வாக்குப்பதிவு அலுவலர்கள் நிலையில் 385 நபர்களும், நிலை-2 வாக்குப்பதிவு அலுவலர்கள் நிலையில் 412 நபர்களும், நிலை-3 வாக்குப்பதிவு அலுவலர்கள் நிலையில் 398 நபர்களும் என மொத்தம் 1596 நபர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கம்பம் சட்டமன்றத் தொகுதியில் 345 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிவதற்காக 431 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களும், நிலை-1 வாக்குப்பதிவு அலுவலர்கள் நிலையில் 379 நபர்களும், நிலை-2 வாக்குப்பதிவு அலுவலர்கள் நிலையில் 391 நபர்களும், நிலை-3 வாக்குப்பதிவு அலுவலர்கள் நிலையில் 452 நபர்களும் என மொத்தம் 1653 நபர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1394 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1673 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களும், நிலை-1 வாக்குப்பதிவு அலுவலர்கள் நிலையில் 1673 நபர்களும், நிலை-2 வாக்குப்பதிவு அலுவலர்கள் நிலையில் 1673 நபர்களும், நிலை-3 வாக்குப்பதிவு அலுவலர்கள் நிலையில் என மொத்தம் 6,692 நபர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் முதல் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு வருகின்ற 28ம் தேதி ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஆண்டிபட்டியில் உள்ள வேளாங்கன்னி மாதா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியிலும், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு, தேனி அருகே வடபுதுபட்டியில் உள்ள தேனி நாடார் சரஸ்வதி கல்லூரி வளாகத்திலும், போடி. சட்டமன்றத் தொகுதிக்கு தேனி முத்து தேவன் பட்டியில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு, உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கவுதியா கல்லூரியிலும் நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், தேர்தல் நடத்தும் அலுவலர்களான பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் கவிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையத் முகைதீன் இப்ராஹிம், தேர்தல் வட்டாட்சியர் சுருளி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களான வட்டாட்சியர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Theni ,
× RELATED கடைசி நேரத்தில் ரத்து செய்தால்...