×

சாத்தான்குளம் கல்லூரியில் கணிதவியல் மன்ற விழா

சாத்தான்குளம், மார்ச் 24: சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதவியல் மன்ற விழா நடந்தது. கல்லூரி பொறுப்பு முதல்வர் ஜோசப் சுரேஷ் தலைமை வகித்தார். கணிதவியல் துறை தலைவர் ஜமுனா ராணி வரவேற்றார். நிகழ்ச்சியை மாணவி திவ்யா தொகுத்து வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி பேராசிரியர் ஜாக்சன் பங்கேற்று பேசினார். தொடர்ந்து மாணவிகளுக்கு கணிதம் தொடர்பான பேச்சுப் போட்டி, கணித மாதிரி போட்டி மற்றும் படத்தொகுப்பு போட்டி நடத்தப்பட்டு மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவி ஜெயபாரதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கணிதவியல் துறை பேராசிரியர்கள் சில்வியா, புஷ்பராணி, கீதா, தேன்மொழி , பிரேசில், பொன் செல்வகுமாரி, பெரில் பாப்சி செய்திருந்தனர்.

Tags : Mathematics Forum ,Sathankulam College ,Sathankulam ,Forum ,Sathankulam Government Women's Arts and Science College ,College Principal ,Joseph Suresh ,Head ,Mathematics Department ,Jamuna Rani ,Divya… ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...