- வைதிலிங்கம்
- தஞ்சாவூர்
- கும்பகோணம்
- பட்டுக்கோட்டை
- பாபநாசம்
- போரவூரனி
- ஒரத்தநாடு
- திருவையாறு
- திருவிடைமருதூர்
நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம், போராவூரணி, ஒரத்தநாடு, திருவையாறு, திருவிடைமருதூர் என 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் ஒரத்தநாடு பெரிய தொகுதியாகும். இந்த தொகுதியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். 10 வருடங்களுக்கு மேல் அதிமுகவில் அமைச்சராக பணியாற்றியவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைத்திலிங்கம், முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
தொடர்ந்து அவரது தீவிர ஆதரவாளர்கள் 15,000க்கு மேற்பட்டோரும் திமுகவில் இணைந்தனர். தற்போது வரை 75% பேர் திமுகவில் இணைந்துள்ளதாகவும், தேர்தலுக்கு முன்பு மீதமுள்ள 25% பேர் திமுகவில் இணைய உள்ளனர். அதிமுக தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர். இவர், டிடிவி தினகரன் தனி கட்சி தொடங்கிய பின், அமமுகவில் இருந்து வந்தார். பின்னர் அமமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுக சார்பில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட தயாராகி வருகிறார்.
அதேபோல் முன்னாள் குடிசை மாற்று வாரிய தலைவர் தங்கமுத்து, அவரது தம்பி மகன் ராஜமாணிக்கம், முன்னாள் அரசு கொறடா மகன் கருணாநிதி ஆகியோரும் போட்டியிட காத்துள்ளனர். அதில் ராஜமாணிக்கம் தீவிரம் காட்டி வருகிறார். ஒரே கட்சியில் உட்கட்சி கோஷ்டி மோதல் இருப்பதால் நிர்வாகிகள் அனைவரும் மனக்கசப்பில் இருந்து வருவதாகவும், ஒரத்தநாடு தொகுதியில் அதிமுகவினர் பல டீமாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் கூறுகையில், வைத்திலிங்கம் திமுகவில் இணைந்துள்ள அவர் தற்போது திமுக சார்பில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டால் மற்ற கட்சிகள் அனைத்தும் ‘டெபாசிட்’ கூட வாங்க முடியாத நிலை உருவாகும். இதனால் அதிமுகவினர் தோல்வி பயத்தில் உள்ளனர்.
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என தலைமையிடத்தில் தேர்தல் செலவிற்காக ரூ.50 கோடி கேட்டு நச்சரிக்கின்றனர். அதேபோல் தேர்தல் நேரத்தில் தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சில்வர் பாத்திரங்கள் திருச்சியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஆர்டர் செய்துள்ளது. அவர்கள் எதை கொடுத்தாலும் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்றனர்.
