×

தேர்தல் தேதி அறிவித்து ஒரு வாரம் ஆகிறது இன்னமும் வெளியே வராத விஜய்: விமர்சிக்கும் நெட்டிசன்கள்

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குமேல் கடந்துவிட்டது. ஆனால், அக்கட்சியின் தலைவர் விஜய் மிகக்குறைந்த அளவில்தான் பொதுவெளிக்கு வந்து மக்களைச் சந்தித்துள்ளார். விஜய் எப்போது வெளியே வருவார் என ஏராளமான விமர்சனங்கள் எழுந்தது. அதற்கு விஜய் ஒவ்வொரு மேடையிலும் ஒவ்வொரு விதமான பதிலைச் சொன்னார். அதேநேரம், மக்களைச் சந்திக்கவிடாமல் திமுக அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதிப்பதாக விஜய் உள்ளிட்ட தவெகவினர் குற்றம்சாட்டினர்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மறுத்தனர். நாங்கள் எல்லோரும் மக்களைச் சந்தித்துக்கொண்டும் பொதுக் கூட்டங்கள் நடத்திக்கொண்டும்தான் இருக்கிறோம் இருக்கிறோம் எனத் தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக, தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு திமுக அரசின் கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளிட்ட எதுவும் இருக்காது; முழுக்கட்டுப்பாடும் தேர்தல் ஆணையத்திடம் இருக்கும்.

தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நாளே விஜய் மாநிலம் முழுவதும் பரப்புரை செய்யும் விதமாகத் தனது பயணத்தைத் தொடங்குவார் என ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் தெரிவித்து வந்தனர். ஆனால், இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டு ஒரு வாரம் கடந்துவிட்டது. தற்போதுவரை பரப்புரை தொடர்பான எந்த அறிவிப்பும் வரவில்லை.

தவெகவினர் சொன்னதுபோல தேர்தல் ஆணையத்திடம் தான் தற்போது கட்டுப்பாடுகள் அனைத்தும் உள்ளது. ஆனால், விஜய் இன்னமும் வெளியே வராமல் உள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இவ்வளவு நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் பரப்புரையில் ஈடுபடவும் திமுக அரசு அனுமதி வழங்க அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதாகக் குற்றஞ்சாட்டி வெளியே வாராமல் இருந்தீர்கள்; நீங்கள் சொன்ன தேர்தல் அறிவிப்பு வந்து ஒருவாரம் ஆகிறது; எப்போ விஜய் வெளியே வருவீர்கள் எனச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Tags : Vijay ,Chennai ,Tamil Nadu Victory Party ,Vijay… ,
× RELATED ரயில்கள் மீது கல்வீசும் நபர்கள் மீது...