- டி.டிவி தீனகரன்
- சென்னை
- AMMK
- பொதுச்செயலர்
- மத்திய உள்துறை அமைச்சர்
- அமித் ஷா
- தில்லி
- ஏர் இந்தியா
- உள்துறை அமைச்சர்
- டெல்லி…
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு நேற்று முன்தினம் இரவு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை திரும்பினார். அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், தமிழ்நாடு பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயலையும் சந்தித்து பேசி, கலந்துரையாடல் நடத்திவிட்டு சென்னைக்கு திரும்பியுள்ளேன்.
ஏப்ரல் 23ம் தேதி நடக்க இருக்கும் தேர்தலில், தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும், எங்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினோம். மகாராஷ்டிரா, டெல்லி, அரியானா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி ஒற்றுமையாக தேர்தல் பணியாற்றி, வெற்றி பெற்றார்களோ அதேபோல் தமிழ்நாட்டிலும் வெற்றி பெறுவதற்கான கலந்துரையாடலை உள்துறை அமைச்சரும், பியூஸ் கோயலும் நடத்தினர்.
நான் கடந்த வாரமே அவர்களை சந்தித்து பேச இருந்தேன். ஆனால் வேலைப்பளு காரணமாக சந்திப்பு தள்ளிப் போனது. எங்கள் கூட்டணி தொகுதி பங்கீடுகள் பேச்சு வார்த்தைகள் அனைத்தும் சென்னையில் தான் அடுத்த இரண்டு மூன்று தினங்களில் நடந்து, சுமுகமாக அறிவிப்பு வெளியிடப்படும். அதை தொடர்ந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்பு மனுக்கள் தாக்கல், பிரசாரம் போன்ற தேர்தல் பணிகள் தொடங்கும்.
கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு எத்தனை இடங்கள் என்று ஊடகங்கள் இஷ்டம் போல் 6, 7, 8 என்று குறைவாக போட்டுக்கொண்டு இருந்தீர்கள். இன்று எண்ணிக்கையை சற்று உயர்த்தி இருக்கிறீர்கள். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு சீட் கொடுப்பதில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு குழப்பம் எதுவும் இல்லை. ஆனால் ஊடகங்கள் தான், மிகவும் கருமித்தனமாக நடந்து கொள்கின்றன. இவ்வாறு டிடிவி.தினகரன் கூறினார்.
