×

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சமூக வலைத்தள பொறுப்பாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சமூக வலைத்தள பொறுப்பாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளின் சமூக வலைத்தள பொறுப்பாளர்களுடன் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் அரங்கத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஒருங்கிணைப்பில் இந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நபில், விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ், சஜின், திராவிடர் கழகத்தின் வி.சி. வில்வம், உடுமலை, வடிவேல்,

தேமுதிக செந்தில், சிபிஎம் சிந்தன், தீக்கதிர் கண்ணன், சிபிஐ மூர்த்தி, மணிமாறன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சல்மான், மதிமுக துரை மோகன்ராஜ், மனிதநேய மக்கள் கட்சி முஸ்தாக் அகமது, முகமது கபீர், மக்கள் நீதி மையம் லட்சுமணன், சௌரப், செந்தில்குமார், எஸ்.டி.பி.ஐ. கரீம், மனிதநேய ஜனநாயக கட்சி இப்ராஹிம் தாரிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் களத்தில் மதச்சார்பற்ற கூட்டணியின் சமூக வலைத்தள ஒருங்கிணைப்பு பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சமூக வலைத்தள பொறுப்பாளர்கள் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

Tags : Chief Minister ,MK Stalin ,Secular Progressive Alliance ,Chennai ,DMK IT ,DMK ,Anna… ,
× RELATED பாபநாசம் அருகே வாகன சோதனையில் ரூ.1...