×

இன்று விசிக உயர்நிலை குழு கூட்டம்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணிப் பொறுப்பாளர்கள் அங்கம் வகிக்கும் உயர்நிலை குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று மாலை 3 மணியளவில் திருமாவளவன் தலைமையில் சென்னையில் அசோக்நகரில் உள்ள கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடல் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது உள்ளிட்ட உடனடி தேர்தல் பணிகளம் விசிகவுக்கான வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைத் தேர்வு செய்தல் குறித்து ஆலோசிக்கப்படும்” என கூறியுள்ளார்.

Tags : VCI ,Chennai ,Thirumavalavan ,Viduthalai Siruthaigal Party ,Ashoknagar ,
× RELATED பாபநாசம் அருகே வாகன சோதனையில் ரூ.1...