சேலம்: கொண்டலாம்பட்டி அருகே அரியானூரில் அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அரியானூரில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து இருசக்கர வாகனம் மற்றும் சரக்கு வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
