×

ஊராட்சி பள்ளியின் 103வது ஆண்டு விழா

சிவகங்கை, மார்ச் 20: சிவகங்கை அருகே இடையமேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் 103வது ஆண்டு விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் லெட்சுமி வரவேற்றார். வட்டாரக்கல்வி அலுவலர் ஜான்சார்லஸ் தலைமை வகித்தார். ஆசிரியர் கோமதி ஆண்டறிக்கை வாசித்தார்.

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் வட்டாரக்கல்வி அலுவலர் மற்றும் சிறந்த மாணவர்களை மாநில கருத்தாளர் வினித்ராஸ் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர். இதில் பள்ளி தலைமையாசிரியர்கள் பாண்டியராஜன், அய்யாச்சி, கோடீஸ்வரன் மற்றும் ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள், கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் சகாய புஷ்பராணி நன்றி கூறினார்.

Tags : Panchayat School ,Sivaganga ,Idayamelur Panchayat Union Primary School ,Headmaster ,Letchumi ,District Education Officer ,John Charles ,Teacher ,Gomathi ,
× RELATED வெளிவட்ட சுற்றுச்சாலையை ஒட்டி புதிய ரயில் வழித்தடம் அமைகிறது