×

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அலங்கார செடிகளில் செல்பி ஸ்பாட் : மலர்கள் இல்லாததால் மாற்று ஏற்பாடு

 

 

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர்கள் அதிகளவு இல்லாத நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அலங்கார செடிகளை கொண்டு செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதனால், சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக தாவரவியல் பூங்காவில் கோடை காலத்தின்போது மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும்.

அதேபோல், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல்வேவேறு வகையாகன மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அந்த தொட்டிகள் மாடங்களிலும், புல் மைதானங்களிலும் அலங்கரித்து வைக்கப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்நிலையில், கோடை சீசனுக்காக தற்போது பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதனை பராமரித்து வருகின்றனர். இதனால், பூங்கா மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது.

கண்ணாடி மாளிகையில் மட்டுமே ஒடு சில மலர்கள் உள்ளன. இந்நிலையில், பூங்காவில் மலர்கள் இல்லாத நிலையில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், இத்தாலியன் பூங்கா, பூங்கா அலுவலகம் அருகே உள்ள செல்பி ஸ்பாட்டுகளில் அலங்கார செடிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மலர்கள் இல்லாத போதிலும், இந்த அலங்கார செடிகள் அழகாக காட்சி அளிக்கும் நிலையில் இதன் அருகே சுற்றுலா பயணிகள் போட்டோக்கள் எடுத்து மகிழ்கின்றனர்.

Tags : FEEDER STATE BOTANICAL PARK ,FOOTY STATE BOTANICAL PARK ,Ooty State Botanic Park ,
× RELATED கமல்ஹாசன் தலைமையில் மாவட்டச்...