×

எனக்கு தெற்கு தான் வேணும் உள்ளதும் போச்சுடா… நொள்ள கண்ணா…!

கோவை மாவட்டத்தில் இலைக்கட்சிக்கும், தாமரை கட்சிக்கும் இடையே சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு பெரும் காமெடியா ஓடிக்கிட்டே இருக்கு.. இம்மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் கடந்த 2021 தேர்தலில் தாமரை கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அது, கோவை தெற்கு தொகுதி. இத்தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் வெற்றிபெற்றார். இவர், இம்முறை இத்தொகுதியில் நின்றால் தோற்றுவிடுவோம் எனக்கருதி கோவை வடக்கு தொகுதிக்கு ஜம்ப் ஆக முடிவுசெய்து, அதற்கான எல்லா வேலைகளையும் செய்துவிட்டார். காரணம், ‘‘கோவை தெற்கு தொகுதியில் கடந்த முறை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் போட்டியிட்டு, ஓட்டை பிரித்ததால் நான் வெற்றிபெற்றேன்… இம்முறை இத்தொகுதியில் அதிகம் வசிக்கும் சிறுபான்மை மக்கள் என்னை தோற்கடித்து விடுவார்கள். அதனால்தான், வடக்கு தொகுதிக்கு ஜம்ப் ஆகிறேன்…’’ என்றார்.

‘‘கோவை வடக்கு தொகுதியில் எனது சமுதாய மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.. அவர்கள் என்னை ஜெயிக்க வைப்பார்கள்…’’ என்று மார்தட்டினார். ஆனால், கட்சிக்குள் என்ன நடந்தது என தெரியவில்லை., எனக்கு மீண்டும் கோவை தெற்கு தொகுதிதான் வேண்டும் என அடம் பிடிக்க துவங்கிவிட்டார். இந்த விவகாரம், மாவட்ட பொறுப்பாளர் எஸ்.பி.வேலுமணி கவனத்துக்கு சென்றது. ஆனால், அவரோ, ‘’இப்படி மாறி மாறி குழப்பாதீங்க… நாங்க, ஏற்கனவே முடிவு செஞ்சது… செஞ்சதுதான்… இதில், எந்த மாற்றமும் இல்லை. கோவை தெற்கு தொகுதியில் எங்கள் கட்சியை சேர்ந்த இன்ஜினீயர் சந்திரசேகர் நிக்க போறாரு… நீங்க, கோவை வடக்கு தொகுதியிலேயே நில்லுங்கள்…’’ என கறாராக கூறிவிட்டார். இதனால், பதறிப்போன வானதி சீனிவாசன், ‘‘இல்லை… இல்லை… எனக்கு கோவை தெற்கு தொகுதிதான் வேணும்…’’ எனக்கூற, இடைமறித்த அவர், ‘‘பேசாம போயி, தேர்தல் வேலையை பாருங்க… உங்களை ஜெயிக்க வைக்கவேண்டியது என்னோட பொறுப்பு…. போங்க… போங்க…’’ எனக்கூறி அனுப்பி வைத்துவிட்டார். இதைக்கேட்ட, சில பாஜ நிர்வாகிகள், ‘‘உள்ளதும் போச்சுடா… நொள்ள கண்ணா…’’ என நொந்துகொண்டனர்.

Tags : south ,Leaf Party ,Lotus Party ,Coimbatore ,South… ,
× RELATED ரஜினி குறித்து தரம் தாழ்ந்த பேச்சு;...