×

மணவாசி அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு சுற்றுச்சூழல் விருது

கிருஷ்ணராயபுரம்; மார்ச். 16: மாநில அளவில் சுற்றுச்சூழல் துறை சார்பில் விருது பெற்ற மணவாசி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரிடம் வாழ்த்து பெற்றார். தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரிவில் 2024 ஆம் ஆண்டில் சீரிய பணியாற்றியமைக்கு மாநில அளவில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மணவாசி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 3வது இடம் பெற்றது.

இந்தப்பள்ளி மாநில அளவில் பள்ளியளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கடந்த மார்ச் 6ம் தேதி நடைபெற்ற விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருது மற்றும் ரூ. 20ஆயிரம் காசோலை ஆகியவையை பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழியிடம் வழங்கினார். அதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியரியை தேன்மொழி கரூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சண்முகவேலுவிடம் விருதனை காண்பித்து வாழ்த்துக்கள் பெற்றார்.

 

Tags : Manavasi Government School Principal ,Krishnarayapuram ,District Elementary Education ,Officer ,Tamil Nadu Government Environment and Climate Change Department… ,
× RELATED கிருஷ்ணராயபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 156 வழக்குகளுக்கு தீர்வு