×

முனியப்பசாமி கண் திறப்பு விழா

 

ஈரோடு, மார்ச் 17: ஈரோடு நொச்சிக்காட்டுவலசு வெள்ளைப்பாறை முனியப்பசாமி கோயில் கண் திறப்பு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
ஈரோடு அடுத்த 46 புதூர் கிராமம் நொச்சிக்காட்டு வலசில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் 300 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற வெள்ளைப்பாறை முனியப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில், ஒண்டிவீரன்,கருப்பண்ணசாமி, உதிரமுனி போன்ற சுவாமிகளும் உள்ளன. இக்கோயில் திருப்பணிகள் நிறைவடைந்து, கண் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கடந்த 15ம் தேதி பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். தொடர்ந்து, இரவு 8 மணிக்கு வாஸ்து பூஜை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று காலை கணபதி ஹோமம் நடந்தது. காலை 6.50 மணிக்கு முனியப்ப சுவாமி கண் திறப்பு விழா செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில், ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று முனியப்ப சுவாமியை வழிபட்டனர்.

Tags : Muniyappasamy ,ceremony ,Erode ,Nochchikattuvalasu, Erode ,Hindu Religious and Endowments Department ,Nochchikattuvalasu ,46 Puthur village ,
× RELATED சாலை சீரமைப்பு போக்குவரத்து திடீர் மாற்றம்