- பொது குறை மறுசீரமைப்பு நாள்
- திண்டுக்கல்
- இந்திய தேர்தல் ஆணையம்
- நடத்தை
- தமிழ்நாடு சட்டமன்றம்
- திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல், மார்ச் 16: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும், கிராம பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல்கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும், கிராம பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்களுக்கு அவசரமான கோரிக்கை ஏதுமிருப்பின் அது குறித்த விவரங்களை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெறும் பெட்டியில் போட்டு செல்லலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
