×

தேர்தல் நடத்தை விதிமுறை அமல் பொதுமக்கள் குறைதீர் கூட்டங்கள் ரத்து

திருவாரூர், மார்ச் 16: திருவாரூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பொதுமக்கள் குறைதீர் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மோகன் சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி தேர்தல் நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால் வாரந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் டிஆர்ஓ, ஆர்டிஓ ஆகியோரால் நடத்தப்படும் மக்கள் நேர்காணல் முகாம்கள் மற்றும் இதர குறைதீர்க்கும் கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்த பின்னர் மேற்கண்ட கூட்டங்கள் நடத்தப்படும் என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags : Thiruvarur ,District Election Officer ,Mohan Chandran ,Tiruvarur district ,Tamil Nadu Assembly… ,
× RELATED சாலை சீரமைப்பு போக்குவரத்து திடீர் மாற்றம்