- முதல்வர்
- எம். கே. திருமாலவன்
- ஸ்டாலின்
- சென்னை
- திமுகா
- விடுதலை சிறுத்தை கட்சி
- திருமாவளவன்
- முதல் அமைச்சர்
- திமுகா
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் திருமாவளவன் நேற்று திடீரென சந்தித்து பேசினார். திமுக தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் நேற்று திடீரென சந்தித்து பேசினார். அப்போது ெதாகுதி பங்கீடு குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்டது. இதில் 4 இடங்களில் அந்த கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் வர உள்ள சட்டசபை தேர்தலில் அதை விட கூடுதல் தொகுதி வேண்டும் என்று விசிக வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், திருமாவளவன் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் நடைபெற உள்ள திமுக-விசிக இடையிலான 2ம் கட்ட பேச்சுவார்த்தையின் போது தொகுதி உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
