சென்னை: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் உணவகங்களுக்கு மின் கட்டணத்தில் ரூ.2 சலுகை வழங்கப்படும் என முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்துள்ளார். ‘அனைத்து விதமான உணவகங்களுக்கும் மின் கட்டண சலுகை பொருந்தும். டீக்கடைகள், வீடுகளில் சமைப்பவர்களுக்கும் மின் கட்டண சலுகை பொருந்தும். கேஸ் தட்டுப்பாடு பிரச்சனை நீங்கும் வரை மின்கட்டண சலுகை தொடரும்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
