×

பட்டாசு ஆலையில் வெடி விபத்து அறை தரைமட்டம்

 

சிவகாசி, மார்ச் 14: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை தரைமட்டமானது. இரவு நேரம் என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சிவகாசி அருகே சாமிநத்தம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிரபல பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியை முடித்துவிட்டு சென்ற நிலையில் இரவு சுமார் 9.30 மணியளவில் திடீரென பட்டாசு ரசாயனக் கலவை செய்யும் அறை வெடித்து சிதறியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் அடுத்தடுத்த அறைகளில் தீ பிடிக்காமல் தவிர்க்கப்பட்டது. இந்த வெடி விபத்தில் ஒரு அறை முற்றிலும் தரைமட்டமானது.

Tags : Sivakasi ,Saminatham ,Sivakasi.… ,
× RELATED பூ மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்