- பூ மாரியம்மன் கோயில் பங்குனி விழ
- திருப்புவனம்
- திருப்புவனம் பூமியம்மன் கோயில்
- பங்கூனி விழா
- பூமாரியம்மன் கோயில்
- திருப்புவனம் புத்தூர்
- மாசி திருவிழா
திருப்புவனம், மார்ச் 14: திருப்புவனம் பூமாரியம்மன் கோயில் பத்து நாள் பங்குனி திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. திருப்புவனம் புதூரில் பூமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் மாசி திருவிழா பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எங்கிருந்தாலும் 10ம் நாள் பங்குனி திருவிழாவில் வருகை தந்து பங்கேற்பது வழக்கம். இந்த திருவிழாவில் தினந்தோறும் நேர்த்திகடன், அன்னதானம் மற்றும் காப்புக்கட்டி விரதமிருக்கும் பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தி அம்மனை வலம் வருவது வழக்கம். ஆயிரம் கண்பானை, மாவிளக்கு, பொம்மை உள்ளிட்ட நேர்த்தி கடனை பக்தர்கள் நிறைவேற்றுவார்கள்.
