சிவகங்கை, மார்ச் 14: சிவகங்கை மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் எதிரில் மக்களைத் தேடி மருத்துவத்திட்ட ஊழியர்(சிஐடியு) சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களை தேடி மருத்துவ ஊழியர்களுக்குமாத ஊக்கத்தொகை ரூ.5,500லிருந்து ரூ.15,000என அதிகரித்து வழங்க வேண்டும். ஊக்கத்தொகையை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும். ஊழியர்களின் ஊக்க தொகையில் துறை சார்ந்த செலவுகள் செய்யும் நிலையை தவிர்த்து, சுகாதாரத்துறையே அச்செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் திறன் வளர்ப்பு மேம்பாட்டு பயி ற்சி கொடுத்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
