×

ராமேஸ்வரத்தில் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு

 

ராமேஸ்வரம், மார்ச் 14:சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ராமேஸ்வரத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மத்திய துணை ராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தி கொடி அணிவகுப்பு நடத்தினர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும். இந்நிலையில் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக தமிழகத்திற்கு மத்திய துணை ராணுவ படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக நாட்டின் எல்லைக்கோடியான ராமேஸ்வரத்திற்கு நேற்று வருகை தந்தனர். ராமநாதபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் சுகுமார் தலைமையில் கொடி அணிவகுப்பு கரையூர் அரசு பள்ளியில் இருந்து துவங்கி 6 நம்பர் லையன், வர்த்தகன் தெரு, திட்டக்குடி வழியாக சென்று லட்சுமண தீர்த்தத்தில் நிறைவடைந்தது.

Tags : Rameswaram ,Election Commission ,Tamil Nadu assembly ,
× RELATED பூ மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்