மதுரை, மார்ச் 14: கோடை காலம் தொடங்கும் முன்பே மதுரை மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருவதால், குளிர்பானங்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது.
இந்தாண்டு கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனடிப்படையில், மதுரை மாவட்டத்தில் கடந்த நில தினங்களாக பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நீராகாரங்களை வாங்கி அருந்தி வருகின்றனர். மதுரை மாநகரில் உள்ள பழக்கடைகள், பேக்கரிகளில் குளிர்பானங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. சாலையோரங்களில் தற்காலிக குளிர்பானங்கள் விற்பனை, தள்ளுவண்டி கடைகளும் அதிகமாக காணப்படுகிறது.
தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம்பழம் உட்பட பழவகைகள், சர்பத், சோடா உள்ளிட்ட விதவிதமான சர்பத்கள், லெமன் ஜூஸ் மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
