- இந்திய தூதரகம்
- சென்னை
- ஈரான்
- வளைகுடா
- மாவட்டம்
- கலெக்டர்
- ரஷ்மி சித்தார்த் ஜகாடே
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவிவரும் போர் பதற்றத்தின் காரணமாக ஈரானில் இருந்து தாயகம் திரும்ப இயலாத நிலையில் தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களைச் சார்ந்த இந்திய மீனவர்கள் அந்நாட்டில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளனர். 595 மீனவர்கள் அந்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் சிக்கியுள்ளனர். சென்னை மாவட்டம் எண்ணூர், இந்திராகாந்தி குப்பம் பகுதியை சேர்ந்த முத்துகுமரன் என்பவர் மீன்பிடி தொழில் மேற்கொள்ள கடந்த 2025ம் ஆண்டு தரங்கம்பாடியிலிருந்து ஈரான் நாட்டிற்கு சென்று, தற்போது அவ்விடத்தில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுடன் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்து வருவதாக கடந்த 9ம் தேதி வாட்ஸ்அப் அழைப்பின் மூலம் தெரிவித்து தம்முடன் தங்கியுள்ள மீனவர்களையும் மீட்டு தாயகம் அழைத்துவர வேண்டியுள்ளார்.
எனவே, ஈரான் நாட்டில் சிக்கியுள்ள சென்னை மாவட்டத்தைச் சார்ந்த மக்கள் ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய தூதரக உதவி எண்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. துபாய்-ஐக்கிய அரபு நாடுகள் +971 543090571 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், 24 மணி நேரமும் இயங்கும் 800 46342 (டோல் ப்ரீ) எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். ரியாத்/சவுதி- +966 542126748, +966 11 4884697, ஜெடா/சவுதி- +966 536209704, +966 12 6648660. டெஹ்ரான்/ஈரான்-+98 9128109115, +98 9128109109, +98 9128109102. டெல் அவீவ்/ இஸ்ரேல்- +972 54 7520711, +972 54 2428378, 03 5226748. மஸ்கட்/ஓமன்- +968 98282270, 800 71234 (டோல் ப்ரீ), டோஹா/ கத்தார்- +974 55647502 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
குடியுரிமைபெறாத தமிழ்நாட்டை சேர்ந்த சேர்ந்த மக்கள் சென்னை அல்லது திருச்சி விமானநிலையத்தை வந்தடைய தமிழ்நாடு அரசின் உதவி எண்கள், மின்னஞ்சல் மூலமாக தொடர்புகொள்ளலாம். உதவி எண்: +91 1800 309 3793 (டோல் ப்ரீ இந்தியா), அலைபேசி/வாட்ஸ்அப்: +91 96000 23645. மின்னஞ்சல்: nrtchennai@tn.gov.in. நேரடி உதவிக்காக தொடர்பு கொள்ள வேண்டி முகவரி: குடியுரிமை பெறாத தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நல ஆணையரகம், எழிலகம் அனெக்ஸ், சேப்பாக்கம், சென்னை-5.
