சென்னை: சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் ரோட்டரி மாவட்டம் 3233-ன் மாவட்ட ஆளுநர் நியமனத் தலைவர் அம்பலவாணன் மற்றும் அன்வர்தீன், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை இயக்குநர், பசுமை தமிழ்நாடு இயக்கம் ஆகியோருக்கிடையில் கையெழுத்திடப்பட்டன.
இந்த ஒத்துழைப்பு மூலம் பின்வரும் முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளில் ரோட்டரி கிளப்புகள் பங்கேற்பது. சென்னை ‘நன்மங்கலம் சூழலியல் பூங்காவின்’ திட்டமிடல், மேம்பாடு மற்றும் பராமரிப்பு இந்த கூட்டாண்மை மூலம் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் பணிகளான பசுமை பரப்பு அதிகரித்தல், நகர்ப்புற பல்லுயிர் பரவல் மேம்பாடு, சுற்றுச்சூழல் கல்வி, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உயிர்ச்சூழல் மீட்டெடுப்பு போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிகழ்ச்சியின் போது அனுராக் மிஸ்ரா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சிறப்பு செயலாளர் (சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்), மருத்துவர் குருசுவாமி டப்பாலா, துணை வனப்பாதுகாவலர், பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் பின்வரும் ரோட்டரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ரோட்டரி நாராயணன், தலைவர் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் நார்த் ஈஸ்ட், ரோட்டரி சுப்பிரமணி, முன்னாள் தலைவர், ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் நார்த் ஈஸ்ட், ரோட்டரி வினோத் குமார், செயலாளர் ரோட்டரி கிளப் ஆப் சென்னை சாரல், ரோட்டரி. எட்வின்’ தலைவர் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் மிட் டவுன், ரோட்டரி, எச்.ராதாகிருஷ்ணன்’ சுற்றுச்சூழல் தலைவர், ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் மிட் டவுன், ரோட்டரி, டாக்டர் இருளாண்டி, ரோட்டரி உறுப்பினர் மற்றும் பல ரோட்டரி கிளப் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
