தூத்துக்குடி, மார்ச் 14: தூத்துக்குடியில் தினகரன் நாளிதழ், தி சென்னை சில்க்ஸ், குமரன் தங்கமாளிகை இணைந்து நாளை(15ம் தேதி) விவாஹா மகளிர் தின கொண்டாட்டம் மற்றும் போட்டிகள், கலைநிகழ்ச்சிகளை நடத்துகின்றன. தூத்துக்குடியில் தி சென்னை சில்க்ஸ், குமரன் தங்கமாளிகை மற்றும் தினகரன் நாளிதழ் இணைந்து சாதனை பெண்களின் சரித்திர பெருவிழா என்ற பெயரில், மகளிர் தின விழா கொண்டாட்டம், ேபாட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நாளை (15ம் தேதி) காலை 10 மணி முதல் நடக்கிறது. தூத்துக்குடி விஇ ரோட்டில் உள்ள சென்னை சில்க்ஸ் வளாகத்தில் காலை 10 மணி முதல் 11.30 மணி வரையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மெகந்தி டிசைன் போட்டிகளும், 12 மணி முதல் 1.30 மணி வரையில் சமையல் கலை போட்டிகளும், 1.30 மணி முதல் 2.30 மணி வரையில் பேஷன் ஷோ போட்டிகளும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையில் டேலன்ட் ஷோ போட்டியும், 6 மணி முதல் இரவு 8 மணி வரையில் கலைநிகழ்ச்சிகளும், தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நடக்கிறது. மெஹந்தி போட்டிகளுக்கு கோன்கள் இலவசமாக வழங்கப்படும். சமையல் போட்டியாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை தாங்களே கொண்டு வந்து, ஒருவகை உணவு பொருளை தயாரித்து காட்சிப்படுத்த வேண்டும்.தனித்திறமை ேபாட்டியாளர்கள் ஒருவர் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டிகளுக்கான முன்பதிவிற்காக 85083 89491, 70929 05888 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். போட்டிகளில் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. அனைத்து போட்டிகளிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இந்த விவாஹா போட்டிகள் முற்றிலும் பெண்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.
