சின்னமனூர், மார்ச் 13: சின்னமனூர் அருகே முத்தையன்செட்டிபட்டியில் பகுதி நேர ரேஷன் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சாக்குமூட்டைகள் எரிந்து நாசமாகின.சின்னமனூர் அருகே முத்தையன்செட்டிபட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்து மக்கள் அருகில் உள்ள எர்ணம்பட்டி கிராம ஊராட்சிக்கு சென்று அரிசி பருப்பு பொருட்கள் உட்பட குடிமைப் பொருட்களை தலையில் சுமந்து வாங்கி நடந்து வருவது வழக்கமாக இருந்தது. இப்பகுதி பொதுமக்கள் இங்கு தனி ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.
அதனை ஏற்று இங்கு தனியாக முத்தையன் செட்டிப்பட்டியில் சுமார் 350 காடுகளுக்கு பகுதிநேர ரேஷன் கடை துவங்கி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் திடீரென ரேசன் கடைக்குள் இருந்து கரும் புகை வெளியே வந்தது. சிறிது நேரத்தில் மளமளவென தீப்பிடித்து ரேஷன் கடை எரிந்தது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
