×

கம்பம்மெட்டு மலைப்பாதையில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு அவசியம் வன ஆர்வலர்கள் கோரிக்கை

கம்பம், மார்ச் 13: கம்பம் மெட்டு மலைப்பாதையில், இரவு நேரங்களில் வனவிலங்குகள் விபத்தில் சிக்காமல் தடுக்கும் வகையில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் மலைப்பாதையாக கம்பம்மெட்டு மலைப்பாதை இருந்து வருகிறது. இந்த மலைப்பாதை, அடிவாரப் பகுதியில் இருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் உள்ள கம்பம் மேற்கு வனப்பகுதி வழியாக செல்கிறது. இங்கு சிறுத்தை, மிளா மான், காட்டுப்பன்றி, குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகளும், அரிய வகை பறவைகளும் உள்ளன.

Tags : Kambammettu mountain road ,Kambam ,Theni ,
× RELATED உரிய ஆவணமின்றி ரயிலில் கொண்டு வந்த ரூ.80 லட்சம் பறிமுதல்