நெல்லை, மார்ச் 12: திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் பிறந்தநாளை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்றம் எதிரில் நடந்த விழாவில் சட்டக் கல்லூரி மாணவ-மாணவிகள் 150 பேருக்கு சட்டப் புத்தகங்கள் வழங்கப்பட்டன நிகழ்விற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் நற்பணி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஜாகிர் உசேன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் வழக்கறிஞர் வள்ளிநாயகம் முன்னிலை வகித்தார். நிகழ்வில் சட்டக் கல்லூரி மாணவ-மாணவிகள் 150 பேருக்கு சட்டப் புத்தகங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் கணேசன், மாவட்டச் செயலாளர் சின்னத்துரை, நிர்வாகிகள் ராஜ்குமார் பார்த்திபன், பீர் ராஜா, பாலாஜி மற்றும் வழக்கறிஞர் சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். இதைத்தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு, மதிய உணவு வழங்கப்பட்டன. நிகழ்வில் மாவட்டத் தலைவர் கம்ஸ் பாண்டியன், வழக்கறிஞர் சுரேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
