- முதல் அமைச்சர்
- சுரண்டை
- குறிச்சம்பட்டி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மு.கே ஸ்டாலின்
- ஆலங்குளம் மத்திய ஒன்றியம்
- ஷேக் முகமது
- யூனியன்
- திருமலைகுமார்
- தென்காசி தெற்கு மாவட்டம்…
சுரண்டை,மார்ச் 11: சுரண்டை அருகேயுள்ள குறிச்சாம்பட்டியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் ஆலங்குளம் மத்திய ஒன்றிய செயலாளர் சேக் முகம்மது தலைமை தாங்கினார். இளைஞரணி அமைப்பாளர் திருமலைக்குமார் முன்னிலை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஜெயபாலன் பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் கிளை செயலாளர் துரைசாமி, பாலசுப்ரமணியம், ஒன்றிய மாணவரணி ஜெயராஜ், ஒன்றிய பிரதிநிதி ஜெயபால், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மருத பாண்டியன், நிர்வாகி முருகராஜா, மங்கலராஜ், கிளை இளைஞரணி அபிஷேக், தேவ பிச்சை, பவின், சந்தோஷ், ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
