- 2026
- சட்டமன்றத் தேர்தல் செலவு கணக்குக்
- கடலூர்
- கடலூர் மாவட்ட ஆளுநர் அலுவலகம்
- 2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல்
- தேர்தல் அலுவலர்
- கம்யூனிஸ்ட்
- ஆதித்யா செந்தில்குமார்
கடலூர் : கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு செலவின கணக்கு குழுக்களுக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் பேசுகையில், வருகிற சட்டமன்ற தேர்தல் 2026 பணிகளை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பாக மேற்கொள்ள ஒவ்வொரு அலுவலர்களுக்கும் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள பறக்கும் படை குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்களும், வீடியோ ஒளிப்பதிவு குழுக்களும் அமைக்கப்பட்டு ஆவணங்களின்றி சட்டவிரோதமாக எடுத்து செல்லப்படும் பணம், மதுபானங்கள், சந்தேகப்படும் வகையிலான அதிகளவிலான பரிசுப் பொருட்கள் கையகப்படுத்தி தேர்தல் வழிகாட்டுதலின்படி ஒப்படைக்க வேண்டும்.
வீடியோ கண்காணிப்பு குழுக்கள் ஒளிப்பதிவுகளை பரிசீலனை செய்து தங்கள் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் செலவினம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் சட்டமன்ற தொகுதியில் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பாக நடத்தப்படும் முக்கிய நிகழ்வுகள், பேரணிகள் மற்றும் கூட்டங்களை ஒளிப்பதிவு செய்ய வேண்டும்.
செலவின கணக்குக் குழு தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அனைத்து குழுக்களும் வழங்கக்கூடிய செலவினம் தொடர்பான அறிக்கையை அந்தந்த சட்டமன்ற தொகுதி வேட்பாளரின் செலவின கணக்கில் சேர்க்கப்பட்டு ஒவ்வொரு வேட்பாளருக்கும் நிழல் கண்காணிப்பு பதிவேடுகளை பராமரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் புண்ணியகோட்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருநாவுக்கரசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தீபா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

